ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதி விடுதிகளில் தங்க தடை


பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வனத் துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சனி, ஞாயிறுகளில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாத் தலங்களான டாப்சிலிப், வால்பாறை, ஆழியார் போன்ற பகுதிகள் களைகட்டியிருந்தன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத் துறையின் விடுதிகளில் தங்கிச் சென்றனர்.

தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால், வனத் துறைக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கான தொகையை திருப்பிக் கொடுக்கவும் வனத் துறை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

x