ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை


முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிலுள்ள 24, 345 அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் smart classroom எனப்படும் திறன்மிகு வகுப்பறைகள் கொண்டதாக மாற்றப்படும் என்று தமிழக சட்டசபை கூட்டத்தைத் தொடங்கிவைத்தபோது (5 ஜன.) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டார். அதையடித்து பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்காகத் தமிழகத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் முன்வைத்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் செய்து தரப்படும். அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

x