பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!


தலைமைச் செயலகம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் அதிமுகவினராக இருப்பதால் அவர்களின் பதவியைப் பறிக்கும் வகையில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

x