அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்றைய(ஜன.7) சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2018ல் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் மூலமாக தமிழ்நாடு நெடுக 20 ஆயிரத்துக்கும் மேலானோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பதவிக்காலம் 2023 வரை உள்ள நிலையில், தமிழக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கூட்டுற சங்க தேர்தல்களில் பெருவாரியாக முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் நகைக்கடன் வழங்கப்பட்டதில் இந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பரவலான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்டம்தோறும் குற்றச்சாட்டுகள் வந்தன. இவற்றை அடுத்து கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.