தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வது குறித்து இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் என்னென்ன கருத்துகளை முன்வைத்துப் பேசுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.