கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலேயே முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையமாக தமிழ்நாடு அரசின் கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது.
இம் மையத்தை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் சு.கணேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள சித்த மருத்துவத்துக்கான கரோனா சிகிச்சை மையத்தில், ஆக்சிஜன் பொருத்திய படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டமைப்பும் மேம்படுத்தப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.