மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளராகப் பதவிவகித்தவர் ப.த.ஆசைத்தம்பி. இவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்தவர்.
இந்த அறிவிப்பை மதிமுக தலைமைக் கழகம் இன்று (ஜன.3) வெளியிட்டிருக்கிறது.