நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு கரோனா


பள்ளி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை

நாகர்கோவிலில் கரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, கல்வி கூடங்களின் வாயிலாக மீண்டும் மெல்ல கூடிவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக் கல்லூரி மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி

நாகர்கோவில் நகரில் கார்மல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. முழுக்க மாணவர்களுக்கான பள்ளிக்கூடமான இங்கு சில மாணவர்களுக்கு சளித் தொந்தரவு இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கார்மல் பள்ளியில் பயிலும் 5 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கார்மல் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்தனர். இதேபோல் பள்ளிவளாகம் முழுவதும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

x