ஹெலிகாப்டர் விபத்து: அனைவரது உடல்களும் அடையாளம் காணப்பட்டதாக அறிவிப்பு


நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ முகாமில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் வந்த ஹெலிகாப்டர், குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்த 13 பேரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிரிகேடியர் லிட்டெர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, டெல்லியில் அவரது குடும்பத்தாரால் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று(டிச.11) காலை மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட அவர்களின் உடல்களுக்கு, ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

விபத்தில் உயிரிழந்ததில் மீதமுள்ள ஹரிந்தர் சிங், ஸ்கோட்ரான் லீடர் சிங், ஹவில்தர் சத்பால், குர்சேவக் சிங், ஜிதேந்தர் குமார் ஆகியோரின் உடல்கள் தீயில் முழுமையாக எரிந்துபோயிருந்ததால் அடையாளம் காணப்படுவதில் சற்று சுணக்கம் இருந்தது. பின்னர், நேற்றிரவு அந்த 4 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

அவர்களது உடல்கள் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்து உடல்நிலை முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x