பிரதமர், ராணுவ அமைச்சர், ஆளுநர் எங்கே?


முப்படை தளபதி விபத்தில் மரணமடைந்ததற்கு சமூக வலைதளங்களில் அனைவரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அவரது புகைப்படத்தை பகிர்ந்து, நெகிழ்ச்சியான வாசகங்களுடன் இரங்கல் தெரிவிக்கிறார்கள் இணையவாசிகள். கூடவே, அரசியல் பதிவுகளும் அதிகமாகத் தென்படுகின்றன.

“என்ன நடக்கிறது? விபத்து நடந்த இடத்துக்கும், ராணுவ அதிகாரிகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கும் பிரதமர் வரவில்லை, பாதுகாப்புத் துறை அமைச்சர் வரவில்லை, உள்துறை அமைச்சர் வரவில்லை, தமிழக ஆளுநர் அஞ்சலி செலுத்தக்கூட நேரில் வரவில்லை. #போலி தேச பக்தி பாஜக” என்று கடுமையான விமர்சனம் செய்கிறார்கள். தமிழக முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தையும், ஆளுநர் ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்யப்படுகிறது.

“தேச பக்தி குறித்து வாய்கிழிய வகுப்பு எடுத்த ஆர்எஸ்எஸ் பாசிசவாதிகளே, நாட்டின் முப்படையின் தளபதி இறந்த இந்நிலையில், பிரதமர், ராணுவ அமைச்சர், மத்திய அமைச்சர்கள் எவரும் நேரில் வரவில்லையே ஏன்? பாசிச பாஜகவுக்கு தேசபக்தி என்பது எப்போதும் மதத்தின் பெயரில் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்தானா?” என்று திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் தங்கள் பதிவுகளில், “தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. 1991 ராஜீவ் படுகொலை, 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு, 2021 பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து எல்லாம் நடந்தது திமுக ஆட்சியில்...” என்று குறிப்பிட்டுள்ளனர்.

x