மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட்!


நாடாளுமன்றத்தில் இன்று குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அவை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்நாளே வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடரின் போது நடந்த சம்பவத்துக்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்பி-க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எளமரம் கரீம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூலோ தேவி நேதம், சாயா வர்மா, ஆர் போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் உசேன், அகிலேஷ் பிரசாத் சிங், சிபிஐயின் பினாய் விஸ்வம், திரிணமூல் காங்கிரஸின் டோலா சென், சாந்தா சேத்ரி, சிவசேனாவின் பிரியங்கா திரிவேதி, அனில் தேசாய் ஆகிய 12 பேரும் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 12 பேருக்கும் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், அன்றைய தினம் அந்த எம்பிக்கள் தங்கள் வன்முறை நடத்தை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீதான 'வேண்டுமென்றே தாக்குதல்கள்' மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவையின் கண்ணியத்தைக் குறைத்ததாக காரணம் கூறப்பட்டுள்ளது. மாநிலங்களவையின் நடத்தை விதிகள் 256-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

x