கனமழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு!


கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று(நவ.29) காலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி ஆகிய இடங்களில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். முடிச்சூர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன் அவற்றை மனுக்களாகவும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார். மேலும் தாம்பரம் மாநகராட்சியின் இரும்புலியூர், வாணியன்குளம் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார்.

கனமழை பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடும் படங்களைக் காண ஸ்வைப் செய்யவும்:

இந்த ஆய்வின்போது, ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

x