திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களையும் இன்று (நவ.28) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருவேற்காடு நகராட்சியில் உள்ள பத்மாவதி நகர், ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம், ஆவடி நகராட்சியின் ஸ்ரீராம் நகர், கணபதி நகர், திருமுல்லைவாயல், பூந்தமல்லி நகராட்சி,
அம்மன் கோயில் தெரு, எம்ஜிஆர் நகர் ஆகிய இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கனமழை பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடும் படங்களைக் காண ஸ்வைப் செய்யவும்: