5 பேர் உயிரிழப்பு; மீட்பு முகாம்களில் 1500 பேர்!


வெள்ளக்காடான சென்னை

மேகவெடிப்புக்கு இணையான பெருமழை கொட்டித் தீர்த்ததில், சென்னையின் தத்தளிப்பு தொடர்கிறது.

இன்று(நவ.9) காலை நிலவரப்படி மழை தொடர்பான உயிரிழப்புகள் 5 ஆக உயர்ந்துள்ளன. 534 குடிசைகள், 4 இதர வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ளம் காரணமாக சுமார் 1,500 பேர் மீட்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு 3.2 செமீ என பதிவாகி உள்ளது.

மீட்பு மையம் ஒன்றில் உணவை பரிசோதிக்கும் முதல்வர்

இதற்கிடையே சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த 2 நாட்களுக்கு மையங்கொள்ளும் கனமழைக்காக, மாநகருக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

மழைவெள்ளம் தொடர்பான புகார்கள் மற்றும் உதவி கோரல்களுக்கான ’உதவி எண் 1913’-ஐ, பொதுமக்கள் அதிக அளவில் தொடர்புகொண்டு வருவதால், உதவி எண்ணுக்கான இணைப்புகள் 5-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

x