விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 43 இடங்களில் சோதனை: சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு


கடந்த அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் தமிழகம் முழுதும் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் இன்று (அக்.18) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட தமிழகம் முழுதும் 43 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட எஃ.ஐ.ஆரின் நகல்:

x