குஜராத் மாடலில் 5 மாநில தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் பாஜக!


குஜராத் உள்பட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் குஜராத் மாடலை அமல்படுத்த பாஜக இப்போதே திட்டம் வகுக்க ஆரம்பித்துவிட்டது. அதென்ன குஜராத் மாடல்? குஜராத்தில் 1995-லிருந்து தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சி நடத்துகிறது பாஜக. அதற்குக் காரணம், அந்த மாநில தேர்தலில் ஒவ்வொரு முறையும் புதுப்புது உத்திகளை பாஜக கையாள்வது தான். அது மோடியின் சொந்த மாநிலம் என்பது பாஜகவுக்கு கூடுதல் செல்வாக்கு.

இந்த நிலையில், கடந்த 2017 தேர்தலில் பாஜகவுக்கு சற்றே இறங்கு முகத்தில் இருந்தது. அப்போது புத்திகூர்மையாகச் செயல்பட்ட பாஜக, சிட்டிங் எம்எல்ஏ-க்களில் பெரும்பகுதியினரை தயவு பார்க்காமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வாரி வழங்கியது. இதனால், அந்தத் தேர்தலில் சரிவைச் சமாளித்து 99 இடங்களில் வென்று ஆறாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. காங்கிரஸுக்கு அப்போது 77 இடங்கள் மட்டுமே கிடைத்தது. குஜராத்தின் இந்த மாடலைத்தான் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அமல்படுத்த தயாராகி வருகிறது பாஜக. அதன்படி குஜராத்தி்லும் ஏனைய நான்கு மாநிலங்களிலும் சிட்டிங் எம்எல்ஏ-க்களை பெருவாரியாக ஒதுக்கிவிட்டு, புதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

x