தீ விபத்தில் இனிப்பகம் எரிந்து சேதம்


சென்னை, ஏழுகிணறு பகுதியில் உள்ள இனிப்பகத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுக் கடை முழுதும் எரிந்து சேதமடைந்தது.

சென்னை, ஏழுகிணறு அம்மன் கோயில் தெருவில் முத்துக்குமார் என்பவர் இனிப்பு தயாரிக்கும் கடை நடத்திவருகிறார். இன்று (செப்.22) மதியம் கடையில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கடை சுவரில் படிந்திருந்த எண்ணெய்யால் தீ மளமளவெனப் பரவிக் கடை முழுவதும் தீ பிடித்துக் கொண்டது.

ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், வண்ணாரப்பேட்டை மற்றும் எஸ்பிளனேடு பகுதியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீவிபத்தில் கடை முழுதும் எரிந்து அத்தனையும் தீக்கிரையானது. இது தொடர்பாக, ஏழுகிணறு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x