அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஜோலார்பேட்டை, போளூர், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் அவருக்குச் சொந்தமான இடங்கள், அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய இடங்கள் என 28 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.90 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வந்தப் புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.