முடி காணிக்கைக்கு கட்டணமில்லை!


அறிவிப்பு பதாகை

‘முடி காணிக்கைக்கு கட்டணம் இனி இல்லை’ என்ற அரசின் உத்தரவு வெளியான அன்று இரவே, அதைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நிர்வாகம்.

முடி காணிக்கை செலுத்துமிடம்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (செப்டம்பர் 4), இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் சேகர்பாபு திருக்கோயில்களில் பக்தர்களின் முடி காணிக்கைக்கான கட்டணம் இன்று (செப்டம்பர் 5) முதல் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்தார்.

‘இந்த அறிவிப்பை பக்தர்கள் அறியும் வண்ணம் அனைத்து கோயில்களிலும் உடனடியாக அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும்’ என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

கோயில் வாசலில் அறிவிப்புப் பதாகை

அதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக முடி காணிக்கை செலுத்தும் இடமான அம்மா மண்டபம், காவிரி படித்துறை, கொள்ளிடம் படித்துறை மற்றும் கோயிலின் 3 வாயில்களிலும் உடனடியாக பக்தர்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பதாகை நேற்று இரவே வைக்கப்பட்டது. அரசு உத்தரவின் நகல் வருவதற்கு முன்பே, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

x