அப்துல்லா போட்டியின்றி தேர்வு


அப்துல்லா

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக, புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மறைவைத் தொடர்ந்து, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த இடத்துக்கான தேர்தல் செப்டம்பர் 13-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதும் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எம்.எம்.அப்துல்லா மனுத்தாக்கல் செய்தார். அதிமுக உள்ளிட்ட இதரகட்சிகள் சார்பில் வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் இன்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, சட்டப்பேரவை செயலரிடமிருந்து அப்துல்லா இன்று பெற்றுக்கொண்டார். 2025-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதிவரை, அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பார். இதையடுத்து மாநிலங்களவையில் திமுகவின் பலம் எட்டாக உயர்ந்துள்ளது.

x