விழுப்புரம்: மே 19-ம் தேதி சுப முகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான இன்று முதல் 19-ம்தேதி வரை மக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய பகுதிகளுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக இன்று 165 பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) 200 பேருந்துகளும் மற்றும் 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 95 பேருந்துகள் என மொத்தம் 460 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ‘https://www.tnstc.in’ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் மேலாண் இயக்குநர் ராஜ் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.