பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியல் வெளியிட தடை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு


மதுரை: பட்டதாரி ஆசிரியர் நியமனப் பட்டி யலை வெளியிட உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

மதுரை சிம்மக்கலைச் சேர்ந்த சுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற் கான போட்டித் தேர்வு பிப். 4-ல் நடைபெற்றது. மொத்தம் 41,485 பேர் தேர்வெழுதினர். தேர்வுக் கான விடைக் குறிப்புகள் பிப்ர வரி 19-ல் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

ஆங்கில ஆசிரியர் தேர்வுக்கான 13-வது கேள்விக்கு எந்த விடையை தேர்வு செய்தாலும் மதிப்பெண் வழங்கப்படும், 11 வினாக்களுக்கு ஏதாவது 3 பதில் தேர்வு செய்தால் மதிப்பெண் வழங்கப்படும். தவறாக இருக்கும் மொத்தம் 24 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது ஏற்புடையதல்ல.

இந்நிலையில், இறுதி விடைத் தாள் அடிப்படையில் பணி நியமன பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை வெளியிட தடை விதித்து, வல்லுநர் குழு ஆய்வுக்குப் பிறகு, பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பதில் அளிக்க வேண்டும்: மேலும், இதே கோரிக்கையுடன் ஜெயந்தி என்பவரும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வின் அடிப்படையில் இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர் பாக ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்

x