ஃபுகுஷிமா: பயங்கரத்தின் 10-வது ஆண்டு!- பாடம் கற்றுக்கொள்ளுமா மனித இனம்?


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

வரலாறு விசித்திரங்கள் நிரம்பியது என்பது, நாம் அறிந்ததுதான். வரலாற்றின் சுவடுகளைப் பார்த்துக்கொண்டே முன்னேறும் மனித இனம், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறதா எனும் கேள்வி மிக முக்கியமானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மனிதத் தவறுகளின் விளைவுகள் கண்முன்னே பாடமாக இருந்தாலும், அவற்றை அலட்சியம் செய்வது என்பது மனித இனத்துக்கே உரித்தான தனிக் குணம். அப்படியான சமகாலப் பாடங்களில் ஒன்று ஃபுகுஷிமா அணு உலை விபத்து. அந்தப் பேரழிவு நிகழ்வின் 10-வது ஆண்டு இது. 1986-ல் நிகழ்ந்த செனோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு, உலகையே உலுக்கிய விபத்து அது.

2011 மார்ச் 11-ல் நிலநடுக்கம், சுனாமி, அணு உலை விபத்து என 3 பேரழிவுகள் சங்கிலித் தொடராக வந்து ஜப்பானை உலுக்கின. 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமி ஜப்பானை நிலைகுலையவைத்தது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய அந்தப் பேரழிவில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2,500-க்கும் அதிகமானோர் காணாமல்போனார்கள். இதுவரை அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

x