கறுப்புக்கொடி... காலில் விழுந்து வேண்டுகோள்!- அதிமுகவுக்கு எதிராக திரளும் சாதி அமைப்புகள்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தமிழகத்தில், இதுவரையில் எந்த முதல்வரும் செய்யாத சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. குறுகிய காலத்தில் மிக அதிகமான சாதிச்சங்க மாநாடுகளில் பங்கேற்றவர் என்கிற பெருமையுடன், ஒவ்வொரு சாதியையும் மகிழ்விக்கும் வகையில் இடஒதுக்கீடு, பெயர் மாற்றம், அந்தச் சாதிகள் கொண்டாடும் தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், சிலைகள் என்று வாரி வழங்கியிருக்கிறார். ஆனால், அவர் எடுத்த கத்திகளே இப்போது அவருக்கு வினையாக வந்து நிற்கின்றன.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக்கொடி கட்டியிருக்கிறார்கள் மறவர் சமூகத்தினர். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ‘அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று தங்கள் சமூகத்தினரின் காலில் விழுந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், பிரமலைக் கள்ளர் சமூகத்து இளைஞர்கள். முக்குலத்தோர் அல்லாத பிற மிகவும் பிற்பட்ட சமூகங்களும் ஒரு மவுன யுத்தத்தை அதிமுகவுக்கு எதிராக நடத்தத் தொடங்கியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை யாரிடமும் கருத்துக் கேட்காமல் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடாக வழங்கியதுதான்.

20 கிராமங்களில் போராட்டம்!

x