காளானை வேக வைக்காதீங்க!


நிஷா
readers@kamadenu.in

உணவே மருந்து என்கிற நிலை மாறி, இன்று உணவே வியாதி என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். இன்றைய சமையல் முறைகள், ருசிக்குச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள், வண்ணப் பொடிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சமூட்டுகின்றன. அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்குதலுக்கும் ஆரோக்கிய சீர்கேடுகளுக்கும் நாம் உட்கொள்ளும் உணவே பிரதான காரணி ஆகிவருகிறது. இந்த நிலையை மாற்றுவது எப்படி?

புகையும் புற்றுநோயும்

சாப்பிடும் உணவால் மட்டுமல்ல சமைக்கும்போது உண்டாகும் புகையாலும் ஆபத்து உண்டு. சமையலுக்கு மரக்கட்டை, தாவரக் கழிவுகள், கரி போன்ற திட எரிபொருளைப் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் 40 லட்சம் பேர் அகால மரணமடைகிறார்கள். உணவில் பயன்படுத்தும் சில உட்பொருட்களும் அறைக்குள் காற்று மாசை உண்டாக்கலாம்.
காற்றோட்டம் இல்லாத சமையலறையில் சமைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும். பொரிப்பதைக் காட்டிலும், வறுப்பதால் எண்ணெய்யில் இருந்து வரும் புகையால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமுள்ளது.  சூரியகாந்தி எண்ணெய் புகை, பொரித்தல், தோசைக்கல்லில் வறுத்தல் போன்றவற்றால், புற்றுநோய் ஏற்படுத்தும் ஆல்டிஹைடுகள் உருவாகின்றன.
அக்ரிலாமைட் தவிர்ப்போம்

x