ஜனவரி 13-ல் கரோனா தடுப்பூசி: பெருந்தொற்றை வெல்லுமா இந்தியா?


நிஷா
readers@kamadenu.in

சென்ற ஆண்டு நம்மை முடக்கிய கரோனா வைரஸுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவுரை எழுத முனைந்துள்ளது இந்தியா. ஆம், ஜனவரி 13-ல் இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கும் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

இதுதொடர்பாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் கூடியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்ஸின்’ எனும் தடுப்பு மருந்தையும், அவசர காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அந்த நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கவும் பரிந்துரை செய்திருக்கிறது.

தடுப்பூசி வழங்கலுக்கான ஒத்திகை

x