அன்புள்ள வாசகர்களுக்கு,
வணக்கம். உங்கள் ‘காமதேனு’ 20-12-20 தேதியிட்ட இந்த இதழே, அச்சு வடிவில் உங்களை வந்தடையும் நிறைவு இதழாக இருக்கும்.
புதுமையான ‘காமதேனு’ இதழை இதுவரை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, அதற்கு அளித்துவந்த ஆதரவுக்கு உளமார்ந்த நன்றி. இதுவரை நீங்கள் கொண்டாடி வந்த உங்கள் நேசத்துக்கு உரிய‘காமதேனு’ இதழை, இனி மின்னிதழாக தொடர்ந்து நீங்கள் படித்து மகிழலாம். www.kamadenu.in என்ற இணைய முகவரியில் டிஜிட்டல் வடிவிலான காமதேனு இதழ் தொடர்ந்து நீங்கள் பார்க்க, படிக்க, ரசிக்கக் கிடைக்கும். மேலும் பல புதிய அம்சங்கள், அரிய செய்திகள், கண்ணைக் கவரும் வடிவமைப்பு என இளமை துள்ளலோடும், இன்னும் விசாலமான பார்வையுடனும் கூடிய கட்டுரைகள், உலகளாவிய பார்வையுடன் ‘டிஜிட்டல் காமதேனு’ தொடர்ந்து உங்களை மகிழ்விக்கும் என உத்தரவாதம் அளிக்கின்றோம்.
என்றும்போல் தொடரட்டும் உங்கள் நல் ஆதரவு.