தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி முகம்: டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் பின்னடைவு


டாக்டர் ராணி ஸ்ரீகுமார் | கோப்புப் படம்

தென்காசி: தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக வேட்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இசை மதிவாணன் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருந்தார். சற்று முன் வெளியான 18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 3,70,882 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 1,97,506 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 1,75,488 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 1,09,993 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

திமுக சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 2 கட்சிகளின் தலைவர்களை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7-வது முறையாக போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி திமுக வேட்பாளரை விட 1,73,376 வாக்குகள் பின் தங்கி உள்ளார். இதுவரை 18 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 6 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டியுள்ளது. எனவே, திமுக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

x