தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து திமுக வேட்பாளர் முன்னிலை


ச.முரசொலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 5 சுற்றுகளிலும் தொடர்ந்து திமுக வேட்பாளர் ச.முரசொலி முன்னிலை வகித்து வருகிறார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் ச.முரசொலி, பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கருப்பு எம்.முருகானந்தம், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஹிமாயூன்கபீர் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகள் வாரியாக எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதல் நண்பகல் 12 மணி வரை ஐந்து சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து திமுக வேட்பாளர் ச.முரசொலி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேதிமுக வேட்பாளரை விட 74,400 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி ஐந்தாவது சுற்று முடிவுகளின்படி, ச.முரசொலி (திமுக): 1,23,574 வாக்குகளும், பி.சிவநேசன் (தேமுதிக): 49,174, எம்.முருகானந்தம் (பாஜக) : 38,707, ஹிமாயூன்கபீர் (நாதக): 32,114 வாக்குகள் பெற்றுள்ளனர்.