செய்தியாளர்களை இயற்கை உபாதை கழிக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பு @ ஸ்ரீபெரும்புதூர்


பிரதிநிதித்துவப் படம்

தாம்பரம்: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் வெளியிடப்பட்டது. ஆனால் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கான முதல் சுற்று முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. காலை 10.25 மணிக்கே முதல் சுற்று முடிவு வெளியிடப்பட்டது. முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 15,434 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.

இரண்டாவது சுற்று நிலவரம்: டி.ஆர்.பாலு( திமுக ) - 54,792, பிரேம் குமார் (அதிமுக) - 21,892, ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) - 11,558, வேணுகோபால்(த.மா.க) - 12,345. இந்தச் சுற்றில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 32,930 முன்னிலை பெற்றுள்ளார்.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை ஒரு அறையில் அடைத்த அதிகாரிகள், அவர்கள் வெளியே செல்வதற்கு கூட விடவில்லை. குறிப்பாக, இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட வெளியே விடாமல் அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த செய்தியாளர்கள் இந்த அராஜக போக்கினைக் காண்டித்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.