திருவள்ளூர் தொகுதியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை


திருவள்ளூர்: திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது. திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டுவில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

712 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், 201 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 102 நுண்பார்வையாளர்கள் மூலம் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையில், காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும் எனவும், 8,30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தபால் வாக்குகள் எண்ணும் பணி அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 9 மணியளவில் தான் தொடங்கியது.