மரக்காணம் அருகே சாலையில் மழை நீர் தேங்கியதால் மறியல்


பிரதிநிதித்துவப் படம்

விழுப்புரம்: மரக்காணம் அருகே சிறுவாடி கிராமத்தில் உள்ள முறுக்கேறி ஏரி மற்றும் ஏரியின் உபரி நீர் வெளியேறும் வழிகளை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிமிரப்பு செய்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துவிடுகிறது. இதனால் இப்பகுதிமக்கள், வணிகர்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதற்கிடையே இப்பகுதியில் மரக்காணம் - திண்டிவனம் சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கத்தின் போது மழை நீர் வடிகால் கால்வாய்களும் அமைக் கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் இந்த மழை நீர்வடிகால் கால்வாய்களும் முறையாக அமைக்கப்படவில்லை என பொதுமக்கள், வணிகர்கள் குற் றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலை யில் நேற்று இப்பகுதியில் மிதமான மழை பெய்தது. மழை நீர் உடனடியாக வெளியேறாமல் சாலையில் குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் இவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, இப்பகுதி மக்கள் வணிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வரும் மழைக் காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் சாலையில் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறி யல் போராட்டத்தால் மரக்காணம் - திண்டிவனம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரக்காணம் - திண்டிவனம் சாலையை விரிவு படுத்தும் பணி நடக்கிறது.

x