உண்மையைச் சொன்ன  மாணவன்... உலகறியச் செய்த ஆசிரியர்! - ஒரு வித்தியாசமான விடுப்பு விண்ணப்பம்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டும் என்றால், விடுப்பு விண்ணப்பத்தில், ‘எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்…’ என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்வதையே வழிவழியாக நாம் வழக்கமாக்கிவிட்டோம். உண்மையான காரணத்தை மாணவர்கள் எழுதுவதுமில்லை; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. வருகைப் பதிவேட்டுக்கான வழக்கமான சம்பிரதாயமாகவே அது காலங்காலமாகத் தொடர்கிறது. ஆனால் மாணவன் தீபக் அப்படியல்ல...  ‘ஐயா எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால் எனது உடல் சோர்வாக உள்ளதால், இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று வித்தியாசமான விடுப்பு விண்ணப்பக் கடிதத்தை எழுதி அனைவரையும் வியக்கவைத்திருக்கிறான்.

x