ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com
வீட்டம்மா கூப்பிட்டாங்க. “ஒரு நிமிஷம் இப்டி வரீங்களா..?” நாலு தடவை கூப்பிட்ட பின்னாடி எனக்குக் கேட்டுச்சு. “என்னம்மா... கூப்டியா”ன்னு கேட்டேன். மகனார் நமுட்டு சிரிப்போட சொன்னார். “உங்களைத் தவிர இந்த அபார்ட்மென்ட்ல அத்தனை பேருக்கும் கேட்டுருச்சு.” போன்ல டிக் டாக் வீடியோவ ரசிச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன். அதை அப்படியே பாஸ் பண்ணிட்டு வந்து, “இப்ப என்ன வேணும் சொல்லு”ன்னேன். கைய உசத்தி, மேல இருந்த வாளியக் காட்டி, “அதை எடுத்துக் குடுங்க”ன்னாங்க.