மனதை நனைக்கும் மழலை இசை!


`கண்ணே கலைமானே…’ பாடலின் இசை வடிவம் பிரவாகமாகப் பெருகி பள்ளி வராந்தாவில் அமர்ந்திருப்பவர்களின் மனதை உருகவைக்கிறது. அதை இசைக்கும் நிரஞ்சனாவின் பிஞ்சுவிரல்கள் கீபோர்டில் அநாயசமாக நர்த்தனமாடுகின்றன. பாடல் முடிந்ததும் ஓர் ஆசிரியை பாரதியின் ‘வந்தே மாதரம் என்போம்’ பாடலை வாசிக்கச் சொல்கிறார். அதையும் நிரஞ்சனா இசைத்து முடிந்ததும் கைதட்டி மகிழ்கிறார்கள் மாணவ மாணவிகள். அங்கே நடுநாயகமாக உட்கார்ந்திருக்கிறார் நிரஞ்சனாவின் தாய் நந்தினி. உடன் மற்ற ஆசிரியர்கள்.



கேட்போரை இசை வெள்ளத்தில் லயிக்கவைக்கும் இந்தச் சின்னஞ்சிறுமி நிரஞ்சனா பார்வை மாற்றுத் திறனாளி. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவர், 10 நிமிடத்தில் 150 திருக்குறளை மூச்சுவிடாமல் சொல்லும் திறன் பெற்றவர், கீபோர்டு, கிடார், புல்லாங்குழல், டிரம்ஸ், வயலின் என ஐந்து இசைக் கருவிகளை இவருக்கு வாசிக்கத் தெரியும். திருக்குறள், திருவெம்பாவை ஒப்புவித்தல், இசை எனப் பல போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கில் பரிசுகளையும் வென்றிருக்கிறார்.

வடகோவை, ராமலிங்கம் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் நிரஞ்சனாவைச் சந்திக்கச் சென்றபோது, நெகிழவைக்கும் மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. 11 வயதுடைய இவருடைய அக்கா அர்ச்சனா ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர். இவர்களுக்காகவே இவர்களின் தாய் 
நந்தினி அன்றாடம் பள்ளிக்கு வருகிறார். தன் மகள்களை கவனிப்பதோடு, மற்ற பிள்ளைகளுக்குப் பாடமும் எடுக்கிறார்.

x