மொராலிஸை வீழ்த்திய ’முறைகேடு ’ - ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா!


சந்தனார்
readers@kamadenu.in

பொலிவிய அதிபர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெடித்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் அதிபர் ஈவோ மொராலிஸ் பதவி விலகியிருக்கிறார். எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ராணுவம் எடுத்த நிலையில், வேறு வழியில்லாமல் அண்டை நாடான மெக்ஸிகோவில் தஞ்சமடைந்திருக்கிறார் மொராலிஸ்.

20 சதவீதத்துக்கும் அதிகமான பூர்வகுடி மக்களைக் கொண்ட தென்னமெரிக்க நாடான பொலிவியாவின் முதல் பூர்வகுடி அதிபராகப் பொறுப்பேற்றவர் மொராலிஸ். ஏழ்மையை ஒழிக்கும் நடவடிக்கைகள், பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த இவர், இன்றைக்கு முறைகேடு தொடர்பான புகாரில் பதவியிழந்து நாட்டைவிட்டே வெளியேறியிருக்கிறார்.

x