பேசிக்கிட்டாங்க...


மதுரை

முனிச்சாலை இறைச்சி கடை ஒன்றில் வாடிக்கையாளரும் கடைக்காரரும்...

``ம்மா... இங்க ஆட்டுத் தலை சின்னதாதான் இருக்கு. படம் புடிச்சு வாட்ஸ் - அப்புல அனுப்புறேன்... ஓகேவான்னு பாத்துச் சொல்லுங்க.''

``என்ன தம்பி... விட்டா ஆட்டோட காலு, குடலு, ஒடம்புன்னு எல்லாத்தையும் வாட்ஸ் - அப் பண்ணுவீங்க போல!''

``என்னண்ணே பண்ணுறது... அப்புறம் அம்மா அது சரியில்லை, இது சரியில்லைன்னு சொல்லக் கூடாது பாருங்க.''

``அது சரி... கூடிய சீக்கிரம் கொழம்பு, சோறு எல்லாமே வாட்ஸ் அப்புலதான் வரப்போகுது. பாத்து சாப்பிட்டுக்க வேண்டியதுதான்.’’

- மதுரை, எம். விக்னேஷ்

வைகுண்டம்

ஒரு டீக்கடையில்...

``சென்னையில என் பையன் ஆபீஸுக்கு ஆன்லைன்ல ஆர்டர் கொடுத்தாலே டீ, காபி எல்லாம் 
பிளாஸ்க்ல வந்துடுதாம்!'’

``போகிற போக்கைப் பார்த்தா ஆன்லைன் பிசினஸைத் தவிர வேற எதுவும் எடுபடாது போல ?’’

``உண்மைதான்! நம்ம ஊர்ல பசங்க ஆத்தங்கரையிலோ, சுடுகாட்டிலோ அஞ்சு ரூபா,பத்து ரூபா வச்சு ரம்மி விளையாடுனா போலீஸ் தூக்கிட்டுப் போயிடுது. ஆனா, அந்த போலீஸுக்கே ‘ஆன்லைன்ல ரம்மி விளையாடி பணம் ஜெயிங்க!' ன்னு எஸ்எம்எஸ் வருதுன்னா பாருங்களேன்... கலிகாலம்.’’

- சூழவாய்க்கால், எ.முகமது.
 

x