வெங்கு அண்ணா


உஷாதீபன்
ushaadeepan@gmail.com

அந்த வீடு யாருக்கும் பிடிக்கவில்லை. மனசில்லாமேலேயே வந்து சேர்ந்தாயிற்று. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், யார் மீது குறை சொல்வது என்றும் புரியாமல் குழம்பிப்போயிருந்தோம்.

யாரும் விரும்பாத, அதே சமயம் யாரும் மறுக்க இயலாத தவிர்க்க முடியாத புதிய சூழல் அத்தனை பேரையும் கட்டிப்போட்டிருந்தது. சொல்லப்போனால் நான்தான் காரணம் என என் மனசாட்சி உறுத்தியது. எல்லோரையும் கொண்டுவந்து வம்படியாய்ச் சிக்கவைத்துவிட்டேனே!

ஆனாலும், வந்து சேர்ந்திருக்கும் இந்த இடத்தில் என்னவோ ஒரு மானசீகமான நெருக்கம். சுற்றியிருக்கும் மக்கள் நம்மவராய்த் தோன்றுகிறார்கள். கஷ்ட நஷ்டங்களோடு வளைய வரும் இவர்கள், கருணை மிகுந்த கண்களைக் கொண்டவர்களாய்த் தெரிகிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் போகப் போகத்தான் இதை உணரக்கூடும்.

x