பயணம்


செந்துறை எம்.எஸ்.மதுக்குமார்
madhukumarmsm@gmail.com

“என் செல்லக்குட்டி... பட்டு புஜ்ஜி… பவுனு புள்ள” என்று தூங்கிக்கொண்டிருந்த பிரேமைச் செல்லமாய் கொஞ்சிக்கொண்டிருந்தான் குமரன். தினக் கூலியாகப் பெயின்டர் வேலை பார்ப்பவன் குமரன். வேலை கிடைக்காத நாட்களில் வெல்டிங் ஹெல்ப்பர் வேலையும் செய்வான். மனைவி ஜக்கு என்கிற ஜக்கம்மா. இந்தத் தம்பதிக்கு பிரேம் ஒரே மகன். வாய், வயிறு என்று சகலத்தையும் கட்டித் தனியார் பள்ளியில் சேர்த்திருந்தனர். தற்போது ஏழாம் வகுப்பு. மகன் சரளமாக ஆங்கிலம் பேசுவதில் குமரனுக்கு அத்தனை பெருமிதம்.

“யோ...வ்வ்...யோவ் தண்ணி போட்டின்னா ராவடி பண்ணுவியே தூங்குற புள்ளைய நோண்டிக்கிட்டு. போய்யா அந்தாண்ட” என ஜக்கு விரட்டவும், சற்று விலகியவன், “எம்...புள்ள…. எம்… புள்ள” என உளறியவாறே தலையைச் சாய்த்தான். இது அன்றாடம் இரவுகளில் நடக்கும் காட்சிதான்.

மறுநாள் வழக்கம் போல வேலைக்குக் கிளம்பியவனைப் பார்த்து, “நைனா…ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கித்தா நைனா” என்று ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டே கேட்டான் பிரேம்.

x