செந்துறை எம்.எஸ்.மதுக்குமார்
madhukumarmsm@gmail.com
வெளிச்சமான அந்த மேடையைத் தவிர எல்லா இடங்களிலும் இருள் பரவியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விளக்குகள் தென்பட்டன. நாடகம் பார்க்க மொத்த கிராமமும் அங்குதான் கூடியிருந்தது.
‘மகா மந்திரியாரே மாதம் மும்மாரி பொழிகிறதா? நாட்டில் மக்கள் நலமா?’ என்று மந்திரியிடம் மன்னர் ஆர்ப்பாட்டமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு.