“வெஞ்சனம் இல்லைன்னா தொரைக்கி...கஞ்சி எறங்காது. இவரு கிழிக்கிற கிழிக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல்.”
சட்டி இல்லாம எண்ணெய் இல்லாம வருத்தெடுத்த சின்னம்மா சித்ராங்கியோட மொகத்தக்கூட பாக்காம அஞ்சாறு அள்ளி முழுங்கிட்டு வெளியில வந்தான் பாலு.
பெருமாளுக்கு மூத்த தாரத்து புள்ள பாலு. காலேஜ் படிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான். வேகமா வெளியே வந்த பாலு, கட்டில்ல உக்காந்துருந்த அப்பன பாத்து, “ அப்பா பக்கத்து டவுன்ல வேலைக்கு ஆள் எடுக்குறாங்களாம். போவணும்... செலவுக்கு ஏதாச்சும் வேணும்” எனச் சொல்லி முடிக்கிறதுக்குள்ள...
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... மொதல்ல இந்த ஆட்ட ஓட்டிக்கிட்டுப் போயி மேயி... எனக்கும் ரெண்டு நாளா ஒடம்புக்கு முடியாமக் கெடக்கு”னு கேட்ட போட்டா சின்னம்மா.