பாடும் பறவைகள்- அருண் சரண்யா


அந்தக் கலைக்கூடத்தின் வாசலின் அருகில் காந்திருந்தான் வெங்கட். காய்ந்துகொண்டிருந்த வெயிலுக்கு இதமாக, கலைக்கூட வளாகத்தில் அடர்ந்த மரங்களின் நிழல் ஆசுவாசம் தந்தது. நடராஜன் இந்நேரம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். இருவரும் சேர்ந்து இந்தக் கலைக்கூடத்தைப் பார்க்கலாம் என்று சொன்னதே நடராஜன்தான். அவன் வருவானா என்று வெங்கட் அடிக்கடி வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவனது அலைபேசி சிணுங்கியது. நடராஜன்தான் அழைத்திருந்தான். ஏதோ அவசர வேலை, வருவதற்கு நேரமாகும் என்று தகவல் சொன்னான். அதுவரையில் காத்திருப்பானேன் என்று கலைக்கூடத்துக்குள் நுழைந்தான் வெங்கட்.

கூடத்தின் சுவரெங்கும் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களில் லயிக்கத் தொடங்கினான். அத்தனை ஓவியங்களிலும் பறவைகளே இருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கியவன், சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும் சட்டென்று நின்றான். எங்கோ பார்த்த ஞாபகமாக இருந்தது. எங்கு என்று புரிபடவில்லை. அடர் நீல சுரிதாரும் ஆரஞ்சு வண்ண துப்பட்டாவுமாக அத்தனை அழகாக இருந்தாள்.

அவள் ஒவ்வொரு ஓவியத்தை நோக்கியும் அடியெடுத்து வைக்க வைக்க, இவனும் கூடவே நகர்ந்தான்.

சிறிதும் எதிர்பாராத வகையில், சட்டென்று திரும்பிய அவள், வெங்கட்டைப் பார்த்து, “உங்களுக்குப் பறவைகள்னா ரொம்ப இஷ்டமா?'' என்று கேட்டாள்.

x