பாசமலருக்கு வந்த ஃபாரின் பரிசு!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

நாளைக்கி ஞாயித்துக் கெழம... காலையில மெதுவா  எந்திரிக்கலாம்னு நெனச்சுக்கிட்டு இருக்கையிலயே வீட்டு அம்மணி எதிர்ல வந்தாங்க. வந்த வேகத்துல,  “நம்ம வின்னிய ஞாபகம் இருக்கா..?”ன்னாங்க. வின்னியாவது பன்னியாவதுன்னு எனக்குள்ள ஓடுன மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சோ என்னவோ,  “அதாங்க நம்ம வினோத்து... எங்க பெரியப்பா மகன்...”ன்னாங்க. “இப்ப என்னவாம் அவனுக்கு”ன்னு அசுவாரசியமா கேட்டேன்.  “யுஎஸ்ல இருக்கான்ல... ஊருக்கு வந்த அவனோட ஃப்ரெண்ட் கிட்ட எனக்கு ஏதோ வாங்கி அனுப்பி இருக்கானாம். நாளைக்குப் போயி அத வாங்கிட்டு வந்திருங்க. அந்தப் பையன் ஒரு நாள் தான் திருச்சியில இருப்பானாம். அப்புறம் டூர் கெளம்பிருவானாம். நம்ம டோல்கேட் பக்கத்துல தான் வீடு”ன்னு என்னோட ஞாயிறு காலை துயில்ல மண்ண அள்ளிப் போட்டா.

x