ஒரு குடையில் இணைந்த உறவுகள்: நான்கு தலைமுறைகளின் ஆச்சரிய சங்கமம்!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in



கோடை விடுமுறைக்கு ஊட்டி, கொடைக்கானல் என்று கிளம்பும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நான்கு தலை
முறை சொந்தங்களை ஒன்றிணைத்து ‘கேம்ப்’ அடித்து உற்சாகம் பொங்க கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது ஒரு குடும்பம்.

நாகர்கோவிலில் ஏசி ஹால் ஒன்றை வாடகைக்கு எடுத்து, உறவுகளின் மேன்மையைக் கொண்டாடப் போகும் குடும்பம் குறித்த தகவல் தெரிந்ததும், அந்த அபூர்வ நிகழ்வைப் பார்க்கும் ஆவல் என்னையும் தொற்றிக்கொண்டது. அரங்கத்துக்குள் நுழைந்ததுமே ‘CAMP’ என்று எழுதப்பட்டிருந்த பதாகை வரவேற்றது. முகாம் என்பது மட்டுமல்ல இதன் அர்த்தம். செல்லப்பா - அம்முக்குட்டி, முத்தையா - பிச்சையம்மாள் தம்பதியினரின் வாரிசுகளின் சங்கமம் என்பதன் சுருக்கமே இந்த ‘கேம்ப்’. செல்லப்பாவும், முத்தையாவும் சகோதரர்கள். இருவருமே இப்போது உயிருடன் இல்லை. ஆனாலும், இவர்களின் வாரிசுகள் சேர்ந்து அவர்களின் நினைவாக இப்படி ஒரு சந்திப்பைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

முத்தையாவின் மனைவி பிச்சையம்மாள் பாட்டி மட்டும்தான் இப்போது அந்தத் தலைமுறையில் உயிரோடு இருக்கிறார். தற்போது 90 வயதாகும் பிச்சையம்மாள் தொடங்கி, 9 மாத குழந்தை வரை இந்த கேம்பில் கலந்துகொண்டார்கள்.

இந்தக் குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்து, கிறிஸ்தவர் என மதங்களின் சங்கமும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், மத வேறுபாடுகளையெல்லாம் கடந்து, குடும்பம் என்னும் ஒரே குடையின் கீழ் இவர்கள் இணைந்திருக்கிறார்கள். நிகழ்வின் தொடக்கத்தில் இறை வணக்கத்தில் ஒலித்த இந்து, கிறிஸ்தவ பாடல்கள் இதைப் பறைசாற்றின. குடும்ப உறுப்பினர்கள் மனம் திறந்து மைக்கில் பேசினார்கள்.

x