தென்னகத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்- தீவிரவாத அச்சுறுத்தலில் தமிழகம்!


எஸ்.எஸ்.லெனின்

உள் நாட்டுக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளால் இரண்டாம் சுற்று குண்டுவெடிப்பு தொடரக்கூடும் என்ற பீதியில் இலங்கை தவித்து வருகிறது. அதற்குச் சற்றும் குறையாத ஆபத்துகள் தென்னிந்தியாவைச் சூழ்ந்திருப்பதாக இந்தியாவும் கவலை கொண்டுள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆளெடுப்பு, ரகசிய பயிற்சி முகாம்கள், தாக்குதலுக்கான முனைப்புகள் எனக் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியா, பயங்கரவாதிகளுக்கு இடமளித்திருப்பதாக வந்துகொண்டிருக்கும் தகவல்களே அதற்குக் காரணம்!

இலங்கையின் பேராபத்தை முன்கூட்டியே மோப்பமிட்டு எச்சரிக்கை விடுத்த இந்தியாவுக்கு பதிலுதவியாய் இலங்கை தந்த புலனாய்வுத் தகவல்கள், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்குத் தீவிரவாத அச்சுறுத்தலை உறுதி செய்கின்றன. இலங்கையைத் தகர்ப்பதற்கான மனித வெடிகுண்டுகள் கேரளாவில் கூடி திட்டமிட்டதும், இலங்கை பாணியிலான தற்கொலை தாக்குதலுக்கு கேரளாவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுமான அந்தத் தகவல்கள் என்.ஐ.ஏ விசாரணைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. மேலும், இலங்கையில் குண்டுவெடிப்புக்கான பூர்வாங்க பணிகள் முடித்த சதிகாரர்கள் சிறுகுழுக்களாக கடல்தாண்டி தமிழகம் மற்றும் கேரளாவில் தஞ்சமடைந்திருக்கலாம் என்பதான தகவல்களும் தென்னிந்தியாவை அச்சுறுத்துவதால் வழிபாட்டுத்தலங்கள், மக்கள் கூடும் பொது இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காசர்கோடு டு காத்தான்குடி

x