ஒரே வருடத்தில் ஒரு பில்லியன் மரங்கள்- விதைத் தோட்டாக்களுடன் வரப்போகும் ட்ரோன்கள்


க.விக்னேஷ்வரன்

“புவி வெப்பமயமாகிறது... ஓசோன் படலத்தில் ஓட்டை பெரிதாகிக்கொண்டே போகிறது” என்றெல்லாம் பதறிக்கொண்டே இருக்கிறோம். அதே சமயத்தில், இதையெல்லாம் கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட மரங்களை வளர்ப்பதற்கு பதிலாக வளர்ச்சி என்ற பெயரில் அழித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு தீர்வைச் சொல்லத்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயோ கார்பன்ஸ் நிறுவனம் விதை நட்டு மரம் வளர்ப்பதற்காக ஆளில்லாத குட்டி விமானத்தை (ட்ரோன்) அறிமுகப்படுத்தியுள்ளது. கூடிய விரைவில் இந்த ட்ரோன்கள் உலகம் முழுவதும் விதைகளை நடப்போகின்றன!

தற்போது பரந்த பிரதேசத்தில் அதிக அளவிலான விதைகளை நடுவதற்கு நாம் பயன்படுத்தும் முறையான விதைப்பந்துகள் 50 சதவீதம் மட்டுமே பலன் தருகிறது. காரணம், நாம் தூவும் விதைப்பந்துகள் நிலத்தின் மேலேதான் விழும். மழை பொழியும்போது விதைப்பந்து கரைந்து உள்ளிருக்கும் விதை வளரும். இதில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ஆனால் பயோ கார்பன் ட்ரோன்கள் பயன்படுத்தப்போவது விதை தோட்டாக்களை.

ஸ்பெஷல் விதை தோட்டாக்கள்

x