இணைய உலகம்! பொத்தானும் போச்சு!


தொகுப்பு: தேவா

பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என மலைபோல் நம்பினார் தினகரன். அரசியல் சூழ்ச்சி அதற்கும் செக் வைத்தது. கடைசி நேரத்தில் பரிசுப் பெட்டியை சின்னமாக ஒதுக்கியது ஆணையம். அப்போதும் விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. பரிசுப் பெட்டியின் பவர் தெரியாமல் அதை வாக்கு எந்திரத்தின் கடைசிக்கு தள்ளி ‘சுயேச்சை’ முத்திரை குத்தினார்கள். அத்தோடு விடுவார்கள் என்று பார்த்தால், பண்ருட்டி அருகே திருவதிகை வாக்குச் சாவடியில் பரிசுப் பெட்டிக்கு ஓட்டுப்போடும் பொத்தானே இல்லாமல் செய்த சுபகாரியமும் நடந்தது. இந்தச் செய்தியை பார்த்துவிட்டு ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார்’ என்ற கமென்ட்கள் இணையத்தில் வைரலாகின. இத்தோடு, “தேர்தல் ஆணையத்தையும் பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொண்டு ரெண்டு சீட்டு கொடுத்திருக்கலாம்” என்று உதயநிதி சொன்னதையும் சேர்த்துப் பதிவிட்டு வைரலாக்கினர். ‘தொழில்நுட்பம் வளர்ந்தா போதுமா பொத்தான் வைக்க வேண்டாமா’ என்ற கிண்டல்களையும் இணையத்தில் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.

x