வாய்ப்பு- எஸ்.லஷ்மிகாந்தன்


தேவாலயத்தின் அகன்ற படிக்கட்டுகளின் ஒரு மூலையில் ஜேம்ஸ் உட்கார்ந்திருந்தார். மாலை நேர ஆரஞ்சு வெயில் அவர் மேல் படர்ந்துகொண்டிருந்தது. எப்படியாவது இந்த இசை நிகழ்ச்சியாவது கிடைத்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு போனுக்காகக் காத்திருந்தார். தேவாலயத்தின் உள்ளிருந்து பாட்டு கசிந்துகொண்டிருந்தது.

“மனுஷருடைய தப்பிதங்களை

நீங்கள் மன்னித்தால், பரமபிதா

உங்களையும் மன்னிப்பார்...” என்கிற மத்தேயு வசனத்துடன் ஆறு மணி என்றது தேவாலயத்தின் ஒலிப்பெருக்கி.

x