என்னைப் பிடிக்குமா... பிடிக்காதா?- வா.மு.கோமு


எதிர்பாராத நேரத்தில் விபத்துகள் நடந்து விடுகின்றன. தனக்கும் முன்னால் டபுள்ஸ் போட்டுக்கொண்டு எக்ஸெல் சூப்பரில் சென்ற பெண் திடீரெனக் கை கூட காட்டாமல் வலதுபுறமாக செலுத்துவாள் என பிரதீப் எதிர்பார்த்தானா என்ன? இவன் என்னதான் மோதலைத் தவிர்க்க பிரேக்கை அழுத்தியும் இவனது எக்ஸெல் அவளுடைய வண்டியின் பின்பாகத்தில் இடித்துவிட்டது.

அந்தப் பெண்ணும் அவளின் பின்புறம் அமர்ந்திருந்த பெண்ணும் சாலையில் தொபுக்கடீரென விழுந்து விட்டார்கள். இவன் பேலன்ஸ் செய்து வண்டியை விழுக்காட்டாமல் இருக்க முயன்றும், வண்டியில் கட்டியிருந்த முப்பது லிட்டர் பால் கேன் கனத்தை தாங்க முடியாமல் கீழே சாய்த்து விட்டான்.

“உனக்கெல்லாம் யாரும்மா ஓட்டுநர் உரிமம் கொடுத்தது? திடீருன்னு வலது பக்கம் வர்றே?” என்றவனுக்கு அத்தனை பதற்றத்திலும் சாந்தினி பதில் கொடுத்தாள். “என் தாத்தா முத்துப்பாண்டி.” என்றவள், அப்போதுதான் பிரதீப்பை நன்றாகப் பார்த்தாள். அதன் பின், அவன் சாலையில் வண்டியில் செல்கையில் கவனிக்க வேண்டிய விசயம் பற்றி சொன்னவை எதுவும் அவள் காதில் ஏறவில்லை. தன்னை இப்படி வைத்த விழி மாறாமல் பார்ப்பவளை சட்டென உணர்ந்தவன் தலையில் கையால் தட்டிக்கொண்டு தன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.

“எனக்கு அது வேணும் மாலினி?” என்று பிரதீப்பை நோக்கி விரல் நீட்டினாள் சாந்தினி.

x