“பாட்டி ஒரு கதை சொல்லு...”
நீண்ட நேரமாக மொபைல் போனில் வாட்ஸ் - அப் செய்திகளில் மூழ்கியிருந்த கிருஷி,
தன் பாட்டியைப் பார்த்துக் கேட்டாள்.
எப்பவும் செல்போனையே நோண்டிக்கொண்டிருக்கும் பேத்தி முதல்முறையாகத் தன்னிடம் கதை கேட்டதில் கமலா பாட்டிக்கு ஆச்சரியம்தான். கிருஷி கமலா பாட்டியின் மகன் வழி பேத்தி. பிறந்து இருபது வருசங்கள் கழித்து முதல் முறை விருந்தாளியாக வந்திருக்கிறாள். அவள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யலாம் என எண்ணி என்ன கதை சொல்லலாம் என்ற யோசனையில் இருந்த பாட்டியைக் கட்டிப்பிடித்து முத்தம் தந்து “கதை சொல்லு பாட்டி.” எனக் கொஞ்சினாள் பேத்தி.